எண்கணிதத்தின் மூலம் உங்கள் காதல் மற்றும் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுங்கள் – வெற்றி நிச்சயம்

எண்கணிதத்தின் மூலம் உங்கள் காதல் மற்றும் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுங்கள் – வெற்றி நிச்சயம்

1,10,19,28 ம் தேதியில் பிறந்தவர்கள்  :

இவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும், 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம். இவர்கள், 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரணம் 1 எண் சூரியன், சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது இவர்களது குடும்ப வாழ்வில் விரிசல், மற்றும் தான் என்ற அகங்காரம் ஏற்படும். திருமண தேதி 1, 10, 19, 28 தேதிகளும்,  6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

 

2,11,20,29 ம் தேதியில் பிறந்தவர்கள்  :

இவர்களின் திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் பொருத்தமானவர்கள். இருப்பினும் 7ந் தேதி பிறந்த பெண்ணே  மிகவும்  சிறந்தவள். ஆனால், 8 அல்லது 9  எண் உடைய  பெண்களை  மட்டும்  திருமணம்  செய்ய  கூடாது. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும். 1ம் எண் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள். நல்ல வழித்துணையாக அமைவாள். எனவே  திருமணம் புரிந்து கொள்ளலாம்இவர்கள்  தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 தேதிகளும், மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

 

3,12,21,30 ம் தேதியில் பிறந்தவர்கள்  :

இவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும். 2 எண்காரர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.

 

4,13,22,31 ம் தேதியில் பிறந்தவர்கள்  :

இவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும், இவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.இருப்பினும் 4ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6 ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும். இவர்கள்  தங்களுடைய  திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம்.

 

5,14,23 ம் தேதியில் பிறந்தவர்கள்  :

இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள்.1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும், கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை.மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே.குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.

 

6,15,24 ம் தேதியில் பிறந்தவர்கள்:

இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3ம் எண்காரர்களை மட்டும் திருமணம் செய்ய கூடாது. மேலும் திருமணம் 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.

 

7,16,25 ம் தேதியில் பிறந்தவர்கள்  :

இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும்.8 ந் தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும்.திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது. 9ம் எண் நடுத்தரமானதுதான்.

 

8,17,26 ம் தேதியில் பிறந்தவர்கள்  :

இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம்.8ம் எண்வரும் பெண்ணை மட்டும்  திருமணம்  செய்யக்கூடாது.  2, 7 வரும்  பெண்களைத்  தவிர்த்துவிட  வேண்டும்.  9ம் எண் பெண்கள் இவர்களை  அடக்கி  ஆள  நினைப்பார்கள்.  திருமணம்  செய்யும்  நாளின்   கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.

 

9,18,27 ம் தேதியில் பிறந்தவர்கள்  :

இவர்கள் தாம்பத்தியத்தில் மிகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை  மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு. ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும். 2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது. திருமண வாழ்க்கையே கசந்துவிடும். திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்.

எண்கணித பொருத்தம் இல்லாமல் காதலிப்பவர்கள் மற்றும் திருமணம் செய்து கொண்டவர்கள் கவலைப்படவேண்டாம் , தங்களது பிறந்த தேதிக்கு ஏற்றவாறு தங்களது பெயரை எண்கணிதம், பார்மட் எண்கணிதம் , சால்டியன் எண்கணிதம் , ஹீப்ரூவ் பிரமீட் எண்கணிதம், பெயர் ஒலி சாஸ்திரம், முப்பரிமாண எண்கணிதம் மற்றும் நேம்சார்ட் முறையில் மாற்றியமைத்து வாழ்வில் உள்ள எல்லா வளங்களையும் பெற்று வாழுங்கள்.

CLICK HERE NAME CHANGE FOR YOUR NEED

Leave A Comment

Request a Callback

Your Name

Mobile Number


No, thanks!
Call us today for consultation – +91 9150160955