கஷ்டங்கள் போக்கும் காலபைரவர்:-கவலைகள் தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி-

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.

கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.

கால பைரவர் என்ற உடனேயே எல்லோருக்கும் முதலில் காசிதான் நினைவிற்கு வருகிறது இல்லையா? காசி என்னும் புண்ணிய நகரத்தைக் காக்கும் காவல் தெய்வம் காலபைரவர். காசியில், காலபைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகே காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் காசியாத்திரை செல்பவர்கள் கூட இறுதியில் காலபைரவரை தரிசித்தால்தான் காசி யாத்திரை பூரணம் அடைவதோடு யாத்திரையின் பலமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

பெளர்ணமிக்குப் பிறகு அமாவாசையை நோக்கி நகரும் நாட்கள் தேய்பிறை காலம் என்போம். இந்த தேய்பிறை காலத்தில், அஷ்டமி திதி என்பது பைரவருக்கானது என்கிறது புராணம். எனவே தேய்பிறை அஷ்டமியில், பைரவரை வழிபடுவது மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது உறுதி. அஷ்டமியில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்பார்கள். கால பைரவருக்கு சிவப்பு நிற ஆடை சாற்றி, செவ்வரளி மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும்.

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவ பகவானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.

சனி பகவானின் இன்னல்களில் இருந்து நாம் விடுபட வேண்டுமெனில், பைரவரை வணங்கி தப்பித்துக் கொள்ளலாம். பைரவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். எம பயம் அகலும். பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

பைரவருக்கு வடைமாலை சார்த்தி வணங்குவார்கள் பக்தர்கள். மிளகு வடை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். செந்நிற மலர்கள், அரளி மாலை கொண்டு பைரவருக்கு அணிவித்து பிரார்த்தனை செய்யுங்கள். வெண் பொங்கல் நைவேத்தியம் வழங்கி, பைரவ வழிபாடு செய்தால், கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்ப்புகள் அகலும். தீய சக்திகள் அண்டாது.

கால பைரவரை வழிபடுவோம் சகலவிதமான கவலைகளில் இருந்து விடுபடுவோம். பைரவ காயத்திரியைக் கூறுவதால் வாழ்வில் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

பைரவ காயத்திரி மந்திரம்.

ஓம் ஷ்வாநத் வஜாய வித்மஹே

சூழ ஹஸ்தாய தீமஹி

தந்நோ பைரவ ப்ரசோதயாத் .

S.No இராசி இராசிக்குரிய பைரவ ஸ்தலங்கள்
1 மேஷம் காரைக்குடி – திருப்பத்தூர் அருகிலுள்ள  பெரிச்சியூர் மகாபைரவர்.  
2 ரிஷபம் திருவண்ணமலையில் உள்ள காலபைரவர்
3 மிதுனம் கும்பகோணம்  –  மயிலாடுதுறை சாலையில் உள்ள சேத்திரபாலபுரம் சேத்திர  பால பைரவர்.
4 கடகம் திருவாரூருக்கு அருகிலுள்ள ஸ்ரீ வாஞ்சியம் பைரவர்
5 சிம்மம் வேலூரில் உள்ள நர்த்தன பைரவர்
6 கன்னி சிவகங்கை திருப்பத்தூர் யோக பைரவர்.
7 துலாம் புதுக்கோட்டை அருகிலுள்ள பொற்பனைக் கோட்டை ஜடாமுனி பைரவர்.
8 விருச்சிகம் புதுக்கோட்டை அருகில் விராட்சிலை ஊர் அருகிலுள்ள தபசுமலை சொர்ண பைரவர்
9 தனுசு சீர்காழி சட்டை நாதர்
10 மகரம் காரைக்குடி அருகில் வயிரவன்பட்டி மார்த்தாண்ட பைரவர்.
11 கும்பம் சங்கரங்கோவில் சர்ப்ப பைரவர்
12 மீனம் கும்பகோணம் அருகில் சேஞ்ஞலூர் வெண்கல ஓசைப் பைரவர்.

Leave A Comment

Request a Callback

Your Name

Mobile Number


No, thanks!
Call us today for consultation – +91 9150160955